அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் மூவருக்கு எதிராக, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன 1500 மில்லின் ரூபா கோரி, மானநஷ்ட வழக்கு

🕔 April 7, 2023

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, தன்னை அவதூறு செய்ததாகக் கூறப்படும் மூவருக்கு எதிராக தலா 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

சமூக ஊடக தளங்கள் மூலம் தன்னை அவதூறு செய்ததாகக் கூறப்படும் யூடியூப் சேனல் மற்றும் இணையதளத்தின் உரிமையாளர்களுக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதன்படி, யூடியூப் சேனல் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் அவதூறான செய்திகளை வெளியிட்டு ஜெனரல் குணரத்னவின் நற்பெயருக்கு சேதம் விளைவித்ததற்காக – அசேல தர்மசிறியிடம் 500 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியை யூடியூப் சேனலில் வெளியிட்டமைக்காக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம மீதும் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்புச் செயலாளரை தமது இணையத்தளத்தின் ஊடாக அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் – ராவணா லங்கா நியூஸ் இணையத்தள உரிமையாளர் ஜி.பி. நிஸ்ஷங்க மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்