கோதுமை, எரிவாயு விலைகள் குறைந்துள்ள போதும் ஹோட்டல், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை: மக்கள் புகார்

🕔 April 6, 2023

– அஹமட் –

கோதுமை மா மற்றும் எரிவாயு போன்றவற்றின் விலைகள் கணிசமானளவு குறைந்துள்ள போதிலும் – ஹோட்டல் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலைகள் குறைவடையவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோதுமை மா சில்லறையாக – ஒரு கிலோ 380 ரூபாவுக்கு விற்கப்பட்டபோது ஹோட்டல் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்கள் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்கே தற்போதும் விற்கப்படுகின்றன.

ஆனால், தற்போது கோதுமை மா – சில்லறையாக 225 ரூபாவுக்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எரிவாயுவின் விலைகளும் நேற்று முன்தினம் குறைவடைந்துள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 1000 ரூபாவுக்கும் அதிகம் குறைவடைந்துள்ளது.

ஆயினும் ஹோட்டல் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை.

பாண் ஒன்று 200 ரூபாவுக்கே தற்போதும் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று பரோட்டா மற்றும் பால் தேநீர் போன்றவற்றின் விலைகளும் அதிகமான ஹோட்டல்களில் குறைவடையவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்