சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

🕔 March 27, 2023

தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்தது.

கோட்டா கோ கம போராட்டம் காலிமுகத் திடலுக்கு அருகாமையில் நடந்தபோது, அதில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியமை தொடர்பில், தேசபந்து தென்னகோன் மீது குற்றஞ்சாட்டி மேற்படி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவோரின் பட்டியலில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவின் பெயரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்