ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன

🕔 March 26, 2023

ஸ்டர் தின தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தேகமவில் இன்று (மார்ச் 26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உரிய நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் இழப்பீடு வழங்கப்படாவிட்டால், நீதிமன்றம் தன் மீது என்ன முடிவு எடுக்கும் எனத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

“நான் உலகை வென்று, நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, இந்த நாட்டை நல்ல நாடாக மாற்றிய போது, ஈஸ்டர் தாக்குதல் நிகழ்ந்து, எந்த தடயமும் இல்லாமல் போய்விட்டது. அதற்காக 100 மில்லியன் இழப்பீடு எனக்கு விதிக்கப்பட்டது.

“நான் எதையும் திருடவில்லை; நான் குண்டு வீசவில்லை.”

“இந்த நாட்களில், எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் பணம் வசூலிக்கிறேன்”.

“எனக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள். எனக்கு 06 மாதங்கள்தான் அவகாசமுள்ளது. இப்போது அதில் மூன்று மாதங்கள் ஆகின்றன”.

“இந்த 06 மாதங்களுக்குப் பிறகு என்னை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் சட்ட நிபுணர் இல்லை.

Comments