வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ

🕔 January 18, 2016
Mahinda Rajapaksa - 054புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாரஹன்பிட்டியவிலுள்ள அபயராமய விஹாரைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்படி விடயத்தை அவர் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகள் நடைமுறைப்படுத்தினால் தேசிய பொலிஸ் படையை முடிவுக்கு கொண்டு வந்து, 09 மாகாணங்களுக்கும் பொலிஸ் படையை தனித்து அமைக்கவேண்டி ஏற்படும்.

இந்தியாவைப் போன்ற பெரிய நாடுகளுக்கு இம்முறை பொருத்தமாக இருக்கும். எனினும் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு பொருத்தமற்றதாகும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது, 13வது திருத்தத்தில் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்