அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழங்களுக்கு விசேட பண்ட வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

🕔 March 7, 2023

பேரிச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 01 ரூபாவாக குறைக்குமாறு ஜனாபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தர உத்தரழவ பிறப்பித்துள்ளார்.

வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ சங்கங்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நிய செலாவணியும் சம்பந்தப்படாமல், அன்பளிப்பு அல்லது நன்கொடையாக பெறப்படும் பேரீச்சம் பழங்களுக்கு மட்டுமே இந்த வரித் தள்ளுபடி பொருந்தும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 22ஆம் திகதி ரமழான் நோன்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்