தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி

🕔 March 4, 2023

லங்கையில் தங்கத்தின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமை காரணமாக தங்கம் பவுன் ஒன்றுக் 15,000 – 17,000 ரூபா வரையில் விலை குறைந்துள்ளதாக இலங்கை ரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட் தங்கத்தின் பவுன் விலை ரூ.157,500 ஆகவும் இருந்ததுள்ளது.

சில நாட்களாக டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்