கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி செய்தோர், வெளிநாடு செல்ல முடியாதவாறு உத்தரவு பெறப்பட்டுள்ளது: முதல்வர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு

🕔 March 3, 2023

– பாறுக் ஷிஹான் –

ல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் தற்போது சிக்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பின்னணியில் யார் இருப்பினும்   நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கல்முனை மாநகர சபை   முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். 

இதேவேளை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதி மோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள் எனவும் அவர் கூறினார்.

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக  விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (2) இரவு கல்முனை மாநகர சபை பொதுமண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போது இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டார்.

“கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடல் தொடர்பில் விசாரிப்பதற்காக ஆணையாளர் தலைமையில் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனவும் அவர் கூறினார்.

மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோசன் அக்தர் 
இங்கு பேசும் போது;

நிதி கையாடலில் தொடர்புபட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

“வெளிநாடுகளுக்கு அவர்கள் தப்பி செல்லாத வகையில் பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்”. என்றார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி சத்தார் ஊடக சந்திப்பில் பேசும் போது;

”மாநகர சபையில் நிதி கையாடல் இடம்பெற்றிருக்கின்றது. எமது மாநகர நிதிப் பிரிவில் இருந்த ஊழியர்கள் இதைச் செய்துள்ளனர். இந்த ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டில் எமது முதல்வருக்கோ எமது உறுப்பினர்களுக்கோ எவ்விதமான சம்பந்தமும் இல்லை”. என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்