புற்று நோய்க்கான விசேட வைத்தியசாலைகளை 04 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கை

🕔 February 28, 2023

புற்று நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வகுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க – சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் இ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதற்கிணங்க மேற்படி மாவட்டங்களில் புற்று நோய்க்கு சிகிச்சை வழங்கும் விசேட வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளன.

இதேவேளை பொருத்தமான இடத்தில் பிரத்யேக நவீன குழந்தைகள் மருத்துவமனையை அமைப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய – குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த குழு இரண்டு மாதங்களுக்குள் ஆய்வை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்