நாட்டுக் கஞ்சாவுடன் பெண் கைது: அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை

🕔 February 25, 2023

– றிசாத் ஏ காதர் –

க்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் – ஒரு கிலோவுக்கும் அதிகமான நாட்டுக் கஞ்சாவை மண்டூர் – சங்கபுர பகுதியில் இன்று (25) பிற்பகல் கைப்பற்றியுள்ளனர்.

அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன், மட்டக்களப்பு மாவட்ட மண்டூர் சங்கபுர பிரதேசத்தில் குறித்த நாட்டுக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதியுடன் 40 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லாவெளி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments