நீதவானின் வாகனத்தை கொள்ளையிட்ட நபர், கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது

குளியாபிட்டி நீதவான் சம்பத் ஆரியசேனவின் காரை (Car) கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதவானுக்குச் சொந்தமான பிலியந்தனை மடபாத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை கூலிக்கு பெற்றுக்கொள்வதை போன்று சென்ற நபர், இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்டளார்.
25 வயதுடைய நபர் ஒருவரை – கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்டுள்ள கார் – வத்தளை ஹுனுபிட்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் உயிரிழந்த பெண் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டையினை பயன்படுத்தி நீதவானுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.
வாடகை வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதாகவும், வெளிநாட்டு பணப்பரிமாற்றம் செய்யப்படும் எனவும், இணையத்தளத்தில் குறித்த நபர் உள்ளிட்ட சிலர் விளம்பரம் செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கார் கொள்ளையிடப்பட்டதன் பின்னர் – அதிலிருந்த ஆவணங்களை மீள ஒப்படைப்பதற்கு 5 லட்சம் ரூபா கப்பத்தை சந்தேக நபர் கோரியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.