‘பதவி வெறியன்’ என நாடாளுமன்றில் ஜனாதிபதியை தூற்றிக் கோஷமிட்ட எதிரணியினர்: சிம்மாசன உரைக்கு முன் சம்பவம்

🕔 February 8, 2023

னாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று (08) புறக்கணித்துள்ளனர்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை இன்று வெளியிட்டார்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவை சபை அமர்வைப் புறக்கணித்தன.

மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் – கலந்து கொள்ளாத நிலையில், ஜனாதிபதி உரையை ஆரம்பித்த போது பலர் வெளிநடப்பு செய்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்ற சபைக்குள் நுழைந்த போது, அவரை ‘பதவி வெறியன்’ என விழித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூற்றி கோஷமிட்டமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்