மாகாண ஆளுநர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பேசினால், பதவி விலக வேண்டும்: கல்வி ராஜாங்க அமைச்சர்

🕔 February 5, 2023

மாகாண ஆளுநர்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தால், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என, கல்வி ராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

“மாகாண ஆளுநர்கள் என்போர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆளுநரும் தங்கள் மாகாண எல்லைக்குள் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டிருக்கின்றார்கள்.

இவை அனைத்தும் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாகவேயன்றி, வேறு எந்த திருத்தச் சட்டத்தின் ஊடாகவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

ஆகவே இந்த அதிகாரங்கள் அனைத்தையும் தங்கள் சுயநலத்துக்காக அவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இப்பொழுது 13வது திருத்தத்துக்கு எதிராக குரல் எழுப்புவது அல்லது கருத்துச் சொல்வது எந்த வகையில் பொருத்தமானதாக இல்லை.

ஆகவே அவர்கள் 13வது திருத்தச் சட்டத்துக்கு உடன்பாடு இல்லை என்றால், உடனடியாக பதவி விலக வேண்டும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: 13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்