உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

🕔 February 3, 2023

ள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தபால் மூலமாக வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதியன்று உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதற்கிடையில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியும், நடத்தக் கூடாது என்று கோரியும் உச்ச நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 10 ஆம் திகதியன்று உச்ச நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்