உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பது முக்கியமானது: இலங்கை வந்துள்ள அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் தெரிவிப்பு

🕔 February 1, 2023

ள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலத்துக்காக குரல் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

“இலங்கை அதன் ஜனநாயகம், அதன் ஆட்சி மற்றும் அதன் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான இன்றியமையாத நேரம் இதுவாகும்.

இதற்காக, மார்ச் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பதும், நாடு முழுவதும் உள்ள மக்கள், அவர்களின் எதிர்காலத்திற்காக குரல் கொடுப்பதும் அடங்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம் தொடர்பான தேசிய உரையாடலை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சீர்திருத்தங்களை சர்வதேச தரத்துக்கு இணங்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: அமெரிக்காவின் முக்கிய ராஜதந்திரி இலங்கையில்: ஜனாதிபதியையும் சந்தித்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்