75ஆவது சுந்திர தினத்தை கறுப்பு நாளாக அறிவித்து புறக்கணிக்க த.தே.கூட்டமைப்பு தீர்மானம்

🕔 January 30, 2023

நாட்டின் 75வது தேசிய சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திரம் கிடைத்த உடனேயே ‘ஜனநாயகம்’ என்ற போர்வையில் பெரும்பான்மை அடிப்படையிலான ஆட்சி முறைமையாக மாற்றப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“அதனால்தான் மற்ற சமூகங்கள் எந்த சுதந்திரத்தையும் பெறவில்லை . சிங்கள பௌத்த மக்கள் மட்டுமே தமக்கு சுதந்திரம் இருப்பதாக நினைத்தனர். இருப்பினும், தங்களுக்கு சரியான சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

75வது சுதந்திர தினத்தை பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாட ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளார். இதன்போது இந்த நாட்டில் வாழும் எவருக்கும் சுதந்திரம் இல்லை. இந்த நாளை ‘கறுப்பு நாளாக’ அறிவித்து, சுதந்திரத்தை முறையாகப் பெறுவதற்கான பிரச்சாரத்தை தொடங்குவோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்