அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இரண்டு மாவட்டங்களில் தனித்துப் போட்டி

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – இரண்டு மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேயே அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் கூறியுள்ளார்.
சில மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் றிசாட் பதியுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் சில சபைகளைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.