எரிவாயு விலை குறைந்தது

🕔 January 5, 2023

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 201 ரூபாவினால் குறைப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 4,409 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

05 கிலோகிராம் எரிவாயு 80 ரூபாவினாலும், 2.5 கிலோகிராம் எரிவாயு 38 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 05 கிலோகிராம் எரிவாயுவின் புதிய விலை 1770 ரூபா. 2.5 கிலோகிராம் எரிவாயு 822 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்