
‘பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்)’ நிறுவனம், வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கும், முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான இடைக்காலத் தடை, மேலும் 06 மாத காலப்பகுதிக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2023 ஜனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து இந்தத் தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்ற மத்திய வங்கி பிணை முறை மோசடியுடன் தொடர்புபட்டதாக, ‘பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்)’ நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளமை நினைவுகொள்ளத்தக்கது.



