
– அஹமட் –
பெண்ணொருவரின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப் போவதாகக் கூறி, அவரிடமிருந்து பெருந்தொகைப் பணம் பறித்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் எனும் நபரை, தொடர்ந்தும் விளக்க மறியவில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் டிசம்பர் 20ஆம் திகதி கைது செய்யப்பட்டு, மறுநாள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், குறித்த நபர் இன்று (04) மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் ரி. கருணாகரன் உத்தவிட்டார்.
இந்த வழக்கில் சந்தேக நபருக்கு எதிராக, காரைதீவு பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். அஸீம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
பௌசான் எனும் மேற்படி ஆசாமிக்கு எதிரான பல்வேறு வழக்குகள் நீதின்றங்களில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் பல குற்றச் செயல்கள் தொடர்பாக முறைப்பாடுகளும் உள்ளன.
தனி நபர்களை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் அவதூறு எழுதியமை, அச்சுறுத்திப் பணம் பறித்தமை உள்ளிட்ட பல முறைப்பாடுகள் இவருக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
தொடர்பான செய்தி:
01) பெண்ணின் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, பணம் பறித்த அட்டாளைச்சேனை ஆசாமிக்கு விளக்க மறியல்



