துபாயில் பாம்பு பிடித்தார் கோட்டாபய ராஜபக்ஷ

🕔 January 5, 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – துபாயிலுள்ள தனியார் தனியார் மிருகக் காட்சி சாலையொன்றில், அதன் உரிமையாளர் மற்றும் விலங்குகளுடன் எடுத்துக் கொண்ட படங்கள் வைரலாகி வருகின்றன.

துபாய் தொழிலதிபர் சைஃப் அஹ்மத் பெல்ஹசாவுக்கு சொந்தமான இந்த விலங்குப் பண்ணைக்கு, துபாய் செல்லும் பிரபலங்கள் வருகை தருவின்றமை வழமையாகும்.

கோட்டாபய ராஜபக்ஷ, பாம்மைப் பிடித்துக் கொண்டிருக்கும் போதும், குரங்குடனும், பறவைகளுடனும் என, ஏராளமான விலங்குகளுடன் எடுத்துக் கொண்ட படங்களை, சைஃப் அஹ்மத் பெல்ஹசா வெளியிட்டுள்ளார்.

கோட்டா அண்மையில் இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்