கிரித்தலே ராணுவ முகாமிலுள்ள அலுமாரிகளுக்குத்தான் சீல் வைக்கப்பட்டுள்ளன: ராணுவப் பேச்சாளர்

🕔 January 14, 2016
Brigadier Jayanath jayaweera - 086கிரித்தலே ராணுவ முகாமுக்கு சீல் வைக்கப்படவில்லை என்று ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கிரித்தலே ராணுவ முகாமுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தவறான பிரசாரம் ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராணுவ முகாமில் இருக்கும் அலுமாரிகள் சிலவற்றுக்கே சீல் வைக்கப்பட்டுள்ளது. எனினும் முகாமுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன” என்றார்.

பிரகீத் எக்னெலியகொட காணாமல் போகச் செய்யப்பட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவை கவனத்தில் கொள்ளாதது இதற்கு காரணமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராணுவப் பேச்சாளர், அந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: இலங்கை வரலாற்றில் ராணுவ முகாமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்