
– முன்ஸிப் –
அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (04) பிறப்பித்துள்ளது.
மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
கோளாவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர். வினோஜன் (24 வயது), அதே பிரதேசத்தைச் சேர்ந்த ரி.எஸ். செல்வம் (17 வயது), அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம். சந்தோஷ் (29 வயது) ஆகியோர், மேற்படி குற்றச்சாட்டில் சந்தேக நபர்களாக கடந்த 28ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் (04) வரை – பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் மூவரும் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்ட போதே, அவர்களை 17ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை வேளையில், அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதியின் ஆவணப் பகுதி தீயில் எரிந்து முழுமையாக நாசமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்: 03 பேர் சம்பந்தப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு



