தலைப்புச் செய்திகள்

வீட்டு மின் கட்டணத்தை ஏன் செலுத்தவில்லை: காரணம் சொன்னார் அமைச்சர் கெஹலிய

தனது வீட்டுக்கான மின்கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம், சரியான மின் கட்டண விபரம் கிடைக்காமையே என,சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணப்பட்டியல் உரிய முறையில் கிடைக்கப்பெற்றவுடன் அதனை நிலுவைத் தொகையுடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகஅமைச்சர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டு மின் கட்டணம் 01 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கடிதம் அனுப்பியிருந்ததாக கடந்த பெப்ரவரி மாதம் செய்திகள் வெளியாகி இருந்தன.