நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு: ஹிருணிகா, ஆதர்ஷாவிடம் நஷ்டஈடு கோரி ஆஷு மாரசிங்க கடிதம்

🕔 December 30, 2022

முன்னாள் நாாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகருமான ஆஷு மாரசிங்க, முன்னாள் நாடாளுமன் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் தனது முன்னாள் பங்குதாரர் ஆதர்ஷா கரந்தன ஆகியோருக்கு கோரிக்கை கடிதம் (Letter of demand) ஒன்றை அனுப்பியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியமைக்காக, இவர்களிடம் 105 பில்லியன் ரூபா நஷ்டஈட்டை அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

அதன்படி, ஹிருணிகாவிடமிருந்து 500 மில்லியன் ரூபாவயும், ஆதர்ஷாவிடமிருந்து 1 பில்லியன் ரூபாவயும் கோரியுள்ளார்.

2022 டிசம்பர் 29ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் அவர் கோரிய இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு ஆஷு தனது கடிதத்தில் கேட்டுள்ளார். தவறினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஷு மாரசிங்கவும், தானும் இரண்டு வருடங்கள் ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் வாழ்ந்ததாக ஆதர்ஷா தெரிவித்திருந்தார்.

இதன்போது தனது செல்ல நாயின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஆதர்ஷா, தனது நாயை ஆஷு மாரசிங்க தங்கள் படுக்கையறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததை ரகசியமாக வீடியோ எடுத்ததாக ஆதர்ஷா அண்மையில் கூறியிருந்தார்.

அவர் தனது நாயை துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டறிந்த பின்னர் அவரை விட்டு வெளியேற முடிவு செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஆஷு மாரசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

தொடர்பான செய்தி: நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முன்னாள் எம்பி: ஆசு மாறசிங்க மீது குற்றச்சாட்டு: வீடியோ காட்சியும் அம்பலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்