சீனா வழங்கிய அரிசி தொடர்பில் விளக்கம்: இந்த அரிசியின் பெயர் ‘ஸ்ரிக்கி றைஸ்’ எனவும் தெரிவிப்பு

🕔 December 30, 2022

லங்கைக்கு சீனா வழங்கிய அரிசி தொடர்பாக, ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார்.   

சீன அரசின் நிவாரண அரிசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக இலங்கைக்கான சீன பிரதித் தூதுவரிடம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.  

இதற்கு பதில் வழங்கிய சீனத் தூதுவர், சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றார்.

இது தொடர்பில் ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறிய அவர்,  தான் உட்பட சீன மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் அரிசியையே இலங்கைக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

அந்த அரிசியை ஸ்ரிக்கி றைஸ் (sticky rice) என்று சொல்வார்கள். அதனை சமைப்பதற்கான வழி முறை என்பது சற்று வித்தியாசமானது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு சீனா அன்பளிப்பாக வழங்கிய அரிசி, அண்மையில் பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்