தலைப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணய முன்மொழிவுகளை, ஆணைக்குழுவிடம் மு.கா கையளித்தது

படம்: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்/பேஸ்புக்

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணய முன்மொழிவுகளை இன்று (09) எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் முஸ்லிம் காங்கிரஸ் கையளித்தது.

அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவுகள் இதன் போது கையளிக்கப்பட்டன.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மு.காங்கிரஸ் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபிக் பிரதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர், இந்த முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.

கடந்த நொவம்பர் 01ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணய ஆணைகுழு, எதிர்வரும் 2023 பெப்ரவரி 28ஆம் திகதி வரை 4 மாதங்களுக்கு செயற்படும்.