
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள், இன்று முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொசவில் குறைக்கப்பட்டுள்ளன.
கீரி சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 16 ரூபாவினாலும், 425 கிராம் எடைகொண்ட டின் மீனின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கீரி சம்பா அரிசி கிலோ ஒன்றின் புதிய விலை 215 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் புதிய விலை 199 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 425 கிராம் எடைகொண்ட டின் மீனின் புதிய விலை 495 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



