டயானா கமகே எம்.பியை நளின் பண்டார எம்.பி திட்டியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும்: பிரதி சபாநாயகர் உறுதி

🕔 December 9, 2022

யானா கமகே எம்.பியை நளின் பண்டார எம்.பி நாடாளுமன்றத்தில் திட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நளின் பண்டார எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோகிலா குணவர்தன மற்றும் சமன்பிரியா ஹேரத் ஆகியோர் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, பிரதி சபாநாயகர் விசாரணைக்கு உறுதியளித்தார்.

“இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை திட்டி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த சந்தர்ப்பத்திலாவது நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்” என கோகிலா குணவர்த்தன எம்.பி இதன் போது கூறினார்.

இதனையடுத்து நளின் பண்டார எந்த நிலையியற் கட்டளையை மீறினார் என்பதை அவர் மீது குற்றம் சுமத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்க வேண்டும் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே மற்றும் நளின் பண்டார ஆகியோருக்கு இடையில் நேற்று (08) சபையில் காரசாரமான பேச்சுக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்