40 கோடி ரூபா பெறுமதியான 22 கிலோ தங்கத்துடன் இலங்கையைச் சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் கைது

🕔 December 9, 2022

லங்கையைச் சேர்ந்த நால்வர் 40 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத் முயற்சித்த போது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இன்று (09) விமான நிலையத்தை வந்தடைந்த போது சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் தமது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில் மாலைகள், வளையல்கள் உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் தங்கத் துகள்கள் உள்ளடங்குவதாகவும் சுதந்த சில்வா கூறியுள்ளார்.

சந்தேக நபர்களில் மூவர் துபாயிலிருந்து இந்தியா – சென்னை வழியாக வந்துள்ளனர்.

இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கை சுங்கப் பிரிவுக்கு வழங்கப்பட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments