வர்த்தகத்துறை அமைச்சராக இருந்துபோது, தனக்குத் தெரியாமலேயே சீனிக்கான வரி குறைக்கப்பட்டதாக பந்துல தெரிவிப்பு

🕔 December 10, 2022

ர்த்தகத்துறை அமைச்சராக தான் பதவி வகித்த காலப் பகுதியில், விகாரையொன்றில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போதுதான், சீனிக்கான வரி 25 சதத்தால் குறைக்கப்பட்டமை தொடர்பில் செய்தி அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிந்து கொண்டதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற விவாதங்களின் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் ஒருவர் தனது அதிகாரத்தின் அடிப்படையில் எதனையும் செய்ய முடியாது என தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, “சந்தையில் அதிகாரம் பகிரப்பட்ட குழுவொன்று உள்ளது” எனவும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தை நாடாளுமன்றம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது, சீனிக்கான இறக்குமதி வரி திடீரென குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்