தலைப்புச் செய்திகள்

வரவு – செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பில் ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் வேலுகுமார் ஆகியோரே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த நொவம்பர் 14ஆம் திகதி சபையில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.

அதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்று, கடந்த 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, 37 மேலதிக வாக்குகளால், இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.

அதற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிராக வாக்களித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.