தலைப்புச் செய்திகள்

மாளிகாவத்தை போதிராஜாராம விகாரையின் பிரதமகுரு உவத்தென்ன சுமன தேரருக்கு விளக்க மறியல்

மாளிகாவத்தை போதிராஜாராம விகாரையின் பிரதமகுரு உவத்தென்ன சுமன தேரரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெமட்டகொடையில் உள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து தேங்காய் எண்ணெயை கொள்வனவு செய்ததற்கு பதிலாக 58 மில்லியன் ரூபா பெறுமதியான எட்டு மோசடியான காசோலைகளை சுமன தேரர் வழங்கியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக சந்தேகநபர் கடமையாற்றிய போது 84,240 கிலோ கிராம் தேங்காய் எண்ணெயை கொள்வனவு செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.