
அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத உள்ளூர் விடுமுறையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சேவைக்கால மூப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஊதியம் இல்லாத விடுமுறையை அதிகபட்சமாக 05 ஆண்டுகள் வரை வழங்குவது தொடர்பாக குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்காக சம்பளமற்ற 05 ஆண்டுகால விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



