
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதற்கு விரும்பினால், தனது பதவியை ராஜினாமா செய்து கொடுக்கத் தயார் என, பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அறம்பேபொல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அல்லது வேறு எந்த கட்சியிடமிருந்தும் அதற்கான கோரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், முன்னாள் ஜனாதிபதிக்கு மீண்டும் நாடாளுமன்றம் வரும் எண்ணம் இல்லை என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர் மீண்டும் அரசியலில் பிரவேசிக்கும் பட்சத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



