
தொலைபேசி கட்டணத்தை அதிகரிப்பதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கைப்பேசி, நிலையான தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
இந்த மாதம் 05ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட கட்டணம் அமலுக்கு வரும்.
மேற்படி கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படும் அதேவேளை, அனைத்து கட்டண தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் 25% அதிகரிக்கப்படும்.
மேலும், அனைத்து கட்டண தொலைக்காட்சி சேவைகளுக்கான VAT 12% லிருந்து 15%ஆக உயர்த்தப்படும்.



