தலைப்புச் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் கடமையாற்றிய பெண், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு

கேகாலை மாவட்டத்திலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (01) துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

பலியானவர் ஹபுதுகல – கேகாலையைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த அலுவலகத்தில் உள்ள அறையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் வேறு தரப்பினரால் சுடப்பட்டாரா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக இலங்கை முழுவதும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

நேற்றும் இலங்கையில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.