தலைப்புச் செய்திகள்

ஜோன் அமரதுங்க, நவீன் திஸாநாயக்க, தயா கமகே உள்ளிட்டோரின் பெயர்கள், ஆளுநர் பதவிக்கு பரிந்துரைப்பு

நாட்டின் 05 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இந்த வாரம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் ஊவா, தெற்கு, வட மத்தி மற்றும் மத்திய மாகாணங்களின் ஆளுநர்கள் மாற்றமின்றி நீடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்துள்ள ஆளுநர்களுக்கான பெயர்களில் ஜோன் அமரதுங்க, நவீன் திசாநாயக்க, தயா கமகே மற்றும் ஏ.எஸ்.பி. லியனகே ஆகியோர் உள்ளனர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.