விசேட வைத்தியர்களுக்கான ‘சனலிங்’ கட்டணத்தில் கட்டுப்பாடு

🕔 January 7, 2016

Rajitha - 011னியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களைச் சந்திப்பதற்கான (சனலிங்) கட்டணம், 250 ரூபாவுக்கும், 2000 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவிலேயே அறவிடப்பட வேண்டும என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விசேட வைத்தியர்கள் நோயாளர்களை குறைந்த பட்சம் 10 நிமிடங்களேனும் பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது தனியார் வைத்தியசாலையில் நோயாளர்களை விசேட வைத்தியர்கள் சில நிமிடங்கள் மாத்திரமே பரிசோதித்து விட்டு திருப்பி அனுப்புகின்றமையினால், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்