பாகிஸ்தானிடம் போர் விமானங்கள் கொள்வனவு; செய்தியை மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர்

பாகிஸ்தானிடம் இருந்து, 08 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நிராகரித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கத்துடனான பேச்சுக்களில் கூட இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்படவில்லை என்று அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது குறித்து தமது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, போர் விமானங்கள் கொள்வனவு குறித்த செய்திகள் தவறானவை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
போர் விமானங்களை வாங்கும் தேவை எழுந்தால், அது தொடர்பில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மை கொள்கையை கடைப்பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.