ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தி; நாளையும், மறுதினமும் தேசிய நிகழ்வுகள்

🕔 January 7, 2016

Mitthiri - 987
– அஸ்ரப் ஏ. சமத் –

னாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதை ஒட்டி, நாளையும், நாளை மறுதினமும் பல்வேறு தேசிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்று ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜயந்த கருனாதிலக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார்.

அந்தவகையில், நாளை 08 ஆம் திகதியும், நாளை மறுதினமும் ஜனாதிபதி அலுவலகம், பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் ஊடக அமைச்சு இணைந்து பல்வேறு தேசிய நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜயந்த கருனாதிலக்க கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாளை  மு.ப 07.00 மணிக்கு களுத்துறை போதிராஜயனன் விகாரையிலும், 10 30 மணிக்கு கோட்டே நாக விகாரையிலும் பௌத்த மத நிகழ்வுகள்  இடம்பெறும்.

நாளை காலை 11.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியை பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய அலுவலகம் திறந்து வைக்கப்படும்.

நாளை பி.பகல் 02.00-05.00 மணிவரை, எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமான தேசிய வைபவம் பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெறும்.

நாளை இரவு 08.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் பௌத்தமத  நிகழ்வுகள் நடைபெறும்.

நாளை மறுதினம் 09 ஆம் திகதி, ஜனாதிபதி அலுவலகத்தில்   அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

அதே தினம் மு.பகல் 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பினை
ஸ்தாபித்தல் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உரையாற்றுவார்.

பிற்பகல் ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாச்சார நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்