
நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்க தேவையான ஆவணங்களைத் தயாரிக்குமாறு, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷா நானாயகார ஆகியோர் பதில் ஜனாதிபதியை சந்தித்து, முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயகவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான நடைமுறையை விரைவுபடுத்துமாறு கோரியுள்ளனர் என தெரியவருகிறது.
முறையான சட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து இந்த செயல்முறையை விரைவுபடுத்த – நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவுக்கு பதில் ஜனாதிபதி ரணில் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



