
ஜனாதிபதிக்கான வெற்றிடத்திற்கு போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டலஸ், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் ஊாக போட்டியிட்டு மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இவர் வெற்றிபெற்றவர்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை அறிவித்தபடி, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதியை ஜூலை 20ஆம் திகதி தெரிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை (19) வேட்புமனுக்கள் கோரப்படுகின்றன.
சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார்.



