தலைப்புச் செய்திகள்

தனிப்பட்ட விஜயமாக கோட்டா சிங்கப்பூர் வந்துள்ளார்; அடைக்கலம் கோரவில்லை: அந்த நாடு அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ‘தனிப்பட்ட விஜயம்’ ஒன்றின் பொருட்டு, சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எந்த அடைக்கலத்தையும் கேட்கவில்லை என்றும், அடைக்கலம் வழங்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில்; ‘கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் அடைக்கலம் கேட்கவில்லை, அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவில்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளதாவது