
மாலைதீவிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று மாலை 5 மணியளவில் சிங்கப்பூர் விமான நிலையத்தை அடைந்தார்.
அவர் சிங்கப்பூர் நோக்கி சவூதியா எயார்லைன்ஸின் SAV 788 என்ற போயிங் 787 ரக விமானத்தில் சென்றார்.
மாலைதீவின் தலைநகர் மாலேயிலிருந்து இன்று உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.30 அளவில் புறப்பட்ட ‘சவூதியா’ எயார்லைன்ஸ் விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கும் வரை, அதன் வழித்தடத்தை சுமார் 12,000 பயனர்கள் கண்காணித்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் சென்று பின்னர் மத்திய கிழக்கு நாடொன்றுக்கும் செல்வார் என, மாலைதீவு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஏ.பி செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.



