
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு இந்தியா உதவியதாக ஊடகங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், அதனை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் மறுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரை இலங்கைக்கு வெளியே அனுப்புவதற்கு இந்தியா உதவியதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கையர்கள் தங்களின் வளம் மற்றும் முன்னேற்றத்துக்கான விருப்பங்களை உணரக் கோரும் வேளையில், இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதை இந்தியா தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



