தலைப்புச் செய்திகள்

கோட்டா மனைவியுடன் மாலைதீவுக்குத் தப்பிச் சென்றார்: மூன்றாவது நாட்டுக்குச் செல்லவும் உத்தேசம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டும் ராணுவ ஜெட் விமாத்தில் தப்பியோடியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

73 வயதான அவர் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலைதீவுக்கு சென்றுள்ளதை இலங்கை விமானப்படையும் உறுதிப்படுத்தியுள்ளது.

அவர்கள் சுமார் அதிகாலை 03:00 மணியளவில் மாலைதீவின் தலைநகர் மாலேயை வந்தடைந்தனர்.

ராஜபக்ஷவின் பதவி விலகல் பல தசாப்தங்களாக இலங்கையை ஆண்ட ஒரு குடும்ப வம்சத்தின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது.

சனிக்கிழமையன்று ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்ட பின்னர், அவர் தலைமறைவாக இருந்த நிலையில், ஜூலை 13 புதன்கிழமை (இன்று) பதவி விலகுவதாக உறுதியளித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருக்கமாட்டார் என்றும், மூன்றாவது நாட்டுக்குப் பயணம் செய்ய இருப்பதாகவும் பிபிசியிடம் ஒரு வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

அவரது சகோதரரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சவும் இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.