தலதா மாளிகை சென்ற பாகிஸ்தான் பிரதமருக்கு, பாரம்பரிய உடையில் தியவதனநிலமே வரவேற்பு

🕔 January 6, 2016

Nawas sheriff - 07
– க. கிஷாந்தன் –

லங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று புதன்கிழமை கண்டி தலதாமாளிகைக்கு சென்றார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டோர் செங்கம்பள வரவேற்பு வழங்கினர்.

இதேவேளை, தலதாமாளிகை தியவதனநிலமே பிரதிப் நிலங்க தேல, பாரம்பரிய ஆடை அணிந்து விசேட வரவேற்பு வழங்கினார்.

இதனையடுத்து, டீ.எஸ்.சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் அலி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தையும் நவாஸ் ஷெரீப் பார்வையிட்டார்.

இதன்பின்னர், தேசிய அருங்காட்சி சாலையில் பாகிஸ்தானின் பண்டைய கால பொக்கிஷங்களை அவர் பார்வையிட்டதோடு, பேராதனை தேசிய பூங்காவில் கண்டி விஜயத்திற்கான ஞாபகார்த்த மரநடுகையிலும் ஈடுப்பட்டார்.Nawas sheriff - 08

Comments

புதிது பேஸ்புக் பக்கம்