ஹிருணிகாவின் வானத்தில் ஆட் கடத்தியவர்களுக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வாகனத்தில் தெமட்டகொடை பகுதியில் வைத்து ஒருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அடையாள அணி வகுப்புக்கு இடம்பெற்றது.
இதன்போது சாட்சியாளர்களால் சந்தேகநபர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்
இதனையடுத்து இவர்களை தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.
மேலும் சாட்சியாளர்களுக்கு எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தக் கூடாது எனவும், அவ்வாறு மேற்கொள்ளப்படும் பட்சத்தில், மீண்டும் விளக்கமறியலுக்கு செல்ல வேண்டி ஏற்படும் எனவும் நீதவான் சந்தேகநபர்களைஎச்சரித்தார்.