லொறி மோதி, 31 வயது பெண் பலி

🕔 December 28, 2015

Accident  - Kothmale - 02
– க. கிஷாந்தன் –

கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் வரதராஜ் சந்திரகலா (வயது 31) எனும் பெண், சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேற்படி பெண், பாதையைக் கடக்க முற்பட்ட வேளையில், நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொறியில் மோதுண்டு பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா லபுக்கலை தோட்டத்திலுள்ள தனது வீட்டிலிருந்து வெதமுல்லை கடை ஒன்றுக்கு சென்ற போதே, குறித்த பெண் விபத்தில் சிக்கியுள்ளார். உயிரிழந்த பெண் ஒரு பிள்ளையின் தாய் என கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆயினும், சம்பவ இடத்திலிருந்து லொறியை அகற்றவிடாமல் அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்ததோடு, ஆத்திரம் கொண்ட மக்கள் லொறியைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறத.

இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை உருவாக்கியிருந்தது. ஆயினும், பொலிஸாரின் தலையீட்டினால், சம்பவ இடத்திலிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.Accident  - Kothmale - 01Accident  - Kothmale - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்